முஸ்லிம் எம்.பிகள் தம் இனத்துக்கு மாத்திரமே சேவை செய்வார்கள்: பத்தரமுல்ல சீலரத்ன தேரரின் குற்றச்சாட்டு

Sri Lanka General Election 2024 Parliament Election 2024
By Laksi Oct 05, 2024 07:33 AM GMT
Laksi

Laksi

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முஸ்லிம் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானால் அவர்கள் தமது இனத்துக்கு மட்டுமே சேவை செய்வார்கள் என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

வன்னியில் நேற்றையதினம் (04) வேட்புமனுவைத் தாக்கல் செய்த பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. குறித்த தேர்தலில் ஜனசத பெரமுன கட்சி வடக்கு மாகாணத்திலும் போட்டியிடுகின்றது. இன, மத பேதமின்றி மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதே எமது கட்சியின் நிலைப்பாடு.

வேட்பு மனுத்தாக்கல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

வேட்பு மனுத்தாக்கல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

மக்களுக்குச் சேவை

வன்னியில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானால் அவர்கள் இன, மதம் பார்க்காது அனைவருக்கும் உதவி செய்கின்றார்கள். அதுபோல சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானால் அவர்களும் இன, மத பேதமின்றி மக்களுக்குச் சேவை செய்கின்றார்கள்.

முஸ்லிம் எம்.பிகள் தம் இனத்துக்கு மாத்திரமே சேவை செய்வார்கள்: பத்தரமுல்ல சீலரத்ன தேரரின் குற்றச்சாட்டு | Muslim Mps Are Accused Of Serving Only Their Race

ஆனால், முஸ்லிம் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானால் அவர்கள் தமது இனத்துக்கு மட்டுமே சேவை செய்கின்றார்கள்.

நாம் வந்தால் வடக்கு, கிழக்கு, மலையகம் எனப் பாராது அனைத்து இன மக்களையும் ஒன்றிணைந்து அவர்களுக்கு இருக்கும் தேவைகளைப் பூர்த்தி செய்வோம் எனவும் தெரிவித்தார். 

சிறுவர்களிடையே பரவும் காய்ச்சல் : எச்சரிக்கும் மருத்துவர்கள்

சிறுவர்களிடையே பரவும் காய்ச்சல் : எச்சரிக்கும் மருத்துவர்கள்

தேர்தலில் தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒன்றிணைந்து களமிறங்குமாறு வலியுறுத்து

தேர்தலில் தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒன்றிணைந்து களமிறங்குமாறு வலியுறுத்து

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW