வேட்பு மனுத்தாக்கல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

Election Commission of Sri Lanka Election
By Mayuri Oct 05, 2024 05:45 AM GMT

எதிர்வரும் பொதுத்தேர்தலுக்காக இதுவரை அரசியல் கட்சி ஒன்றும், சுயேட்சை குழுக்களும் 5 மாவட்டங்களில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய பத்தரமுல்லை சீலரத்ன தேரர் தலைமையிலான ஜனசெத பெரமுன யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டங்களில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளது.

வேட்புமனுக்களை ஏற்கும் பணி

இந்தநிலையில், கொழும்பு, களுத்துறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் 03 சுயேச்சைக் குழுக்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

வேட்பு மனுத்தாக்கல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல் | Parliament Election In Sri Lanka

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் பணி நேற்று ஆரம்பமாகி எதிர்வரும் 11ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW