சிறுவர்களிடையே பரவும் காய்ச்சல் : எச்சரிக்கும் மருத்துவர்கள்

Sri Lanka Ministry of Health Sri Lanka Sri Lankan Schools
By Sivaa Mayuri Oct 05, 2024 03:10 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

Courtesy: Sivaa Mayuri

இலங்கையின் சில பகுதிகளில் இன்ஃப்ளூயன்ஸா அறிகுறிகளைக் காட்டும் சிறுவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே பாதிக்கப்படக்கூடிய பிரிவினர், முகக்கவசங்களை அணியவேண்டும் என கொழும்பு ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா ஊடகங்கள் ஊடாக வலியுறுத்தியுள்ளார்.

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

நோய் அறிகுறிகள்

இந்த நோயின் அறிகுறிகளாக சுவாச பிரச்சினைகள், இருமல், சளி, காய்ச்சல், மூக்கில் நீர் வடிதல், மூக்கில் அடைப்பு மற்றும் சில சமயங்களில் வாந்தி போன்றவை ஏற்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்களிடையே பரவும் காய்ச்சல் : எச்சரிக்கும் மருத்துவர்கள் | Influenza Fever Symptoms In Sri Lanka

இந்த நிலையில் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மருத்துவர்களின் உதவியை நாடுமாறும் அவர் கோரியுள்ளார்.

இன்ஃப்ளூவன்ஸா என்பது ஒரு வைரஸ் தொற்று ஆகும், இது குறிப்பாக மேற்கத்தேய நாடுகளில் குளிர்காலத்தில் பரவுகிறது.

இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் A, B, C மற்றும் D வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

இன்ஃப்ளூயன்ஸா C குறைவான பொதுவானது மற்றும் பொதுவாக லேசான சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகிறது,

அதே நேரத்தில் இன்ஃப்ளூயன்ஸா D இதுவரை விலங்குகளையே பாதிக்கிறது.

எவ்வாறாயினும், இன்ஃப்ளூயன்ஸா A மற்றும் B இன் திரிபுகள் இப்போது இலங்கையிலும் பரவியுள்ளன.

முன்கூட்டியே அடையாளம் காண்பது

இந்த நோய் பரவல் காரணமாக, குறிப்பாக இரண்டரை வயதுக்குட்பட்ட குழந்தைகள், 55 வயதுக்கு மேற்பட்டவர்கள், பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள், நீண்ட கால சுவாச நோய்கள் உள்ளவர்கள், ஆஸ்துமா, நீரிழிவு, புற்றுநோய் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு காய்ச்சல் கடுமையாக இருக்கும்.

சிறுவர்களிடையே பரவும் காய்ச்சல் : எச்சரிக்கும் மருத்துவர்கள் | Influenza Fever Symptoms In Sri Lanka

எனவே, காய்ச்சல் வேகமாகப் பரவுவதற்கு முன், குறிப்பாக குழந்தைகள் மற்றும் பாடசாலை வயது சிறுவர்கள் போன்றவர்கள் மத்தியில் முன்கூட்டியே அடையாளம் காண்பது நல்லது.

இந்த இன்ஃப்ளூயன்ஸா நிலைமை நீர்த்துளிகள் மூலம் பரவக்கூடும், எனவே அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றவர்களுக்கு பரவுவதைத் தடுக்க முகக்கவசங்களை அணியுமாறு, கொழும்பு ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா, அறிவுறுத்தியுள்ள்ளார்.

புதிய ஜனாதிபதி அநுரவை புகழ்ந்துள்ள எரிக் சொல்ஹெய்ம்

புதிய ஜனாதிபதி அநுரவை புகழ்ந்துள்ள எரிக் சொல்ஹெய்ம்

தேர்தலில் தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒன்றிணைந்து களமிறங்குமாறு வலியுறுத்து

தேர்தலில் தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒன்றிணைந்து களமிறங்குமாறு வலியுறுத்து

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW