புதிய ஜனாதிபதி அநுரவை புகழ்ந்துள்ள எரிக் சொல்ஹெய்ம்
அமைதியான, பல்லின, பசுமையான மற்றும் வளமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு சர்வதேச சமூகம் இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டும் என நோர்வே கோரியுள்ளது.
நோர்வேயின் இராஜதந்திரியும் முன்னாள் அரசியல்வாதியுமான எரிக் சொல்ஹெய்ம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டு இரண்டு வாரங்களே ஆகியுள்ள நிலையில், அவர் அந்த நேரத்தை சரியாக பயன்படுத்தியுள்ளதாக சொல்ஹெய்ம் தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் வெளியாகிய செய்தியில்,
The international community should support Sri Lanka ??!
— Erik Solheim (@ErikSolheim) October 4, 2024
It’s only two weeks since Sri Lanka elected Anura Kumara Dissanayaka President. He has used the time well.
* He got the diplomacy exactly right. First meeting with the Indian high commissioner, then the Chinese… pic.twitter.com/4eF5M8EL5v
அனைவருக்கும் ஒரு இலங்கை
“அநுரகுமார திசாநாயக்க, இராஜதந்திரத்தை சரியாகப் புரிந்து கொண்டுள்ளார். முதலில் இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்தித்தார், பின்னர் சீனத் தூதுவர் சந்தித்துள்ளார். இதன் மூலம் இலங்கைக்கு இந்தியா மிகவும் முக்கியமானது என்று சமிக்ஞை செய்துள்ளார்.
சீனாவை சந்தித்த பின்னர், மேற்கு, ரஷ்யா மற்றும் பல நாடுகளின் தூதர்களை சந்தித்துள்ளார்.
அதேநேரம் சத்தியப்பிரமாணம் செய்த உடனேயே அவர் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் மற்றும் மதத் தலைவர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டதுடன், அனைத்து இன சமூகங்களுக்கும் ஒரு இலங்கையை உருவாக்குவது வலுவாக மாறியுள்ளது.
இதற்கிடையில் வர்த்தகத்துடன் நெருக்கமாகச் செயற்படுவதன் மூலமே, வளமான இலங்கையை உருவாக்கி, ஏழைகளுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்குத் தேவையான வளங்களைக் கொண்டு வர முடியும் என்பதை உணர்ந்து, வர்த்தக சமூகத்தை அநுர சந்தித்துள்ளார்.
ஊழலற்ற அரச அதிகாரம்
அவர் ஊழலற்ற மக்களை அரச அதிகாரத்திற்கு கொண்டு வருகிறார். அமைச்சர்களுக்கான சொகுசு கார் கொடுப்பனவுகளை குறைப்பதன் மூலம், தலைவர்களுக்கு மிகவும் அடக்கமான வாழ்க்கை முறையை அவர் சமிக்ஞை செய்கிறார்.
எனினும் இவை எதுவும் இலங்கையில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்காது.
அத்துடன் அனைவரையும் அமைதிப்படுத்தாது என்று இராஜதந்திரிகள் மத்தியில் ஒரு இடதுசாரித் தலைவரான அநுரகுமார மீது சந்தேகம் உள்ளது.
எனவே அமைதியான, பல்லின, பசுமையான மற்றும் வளமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு சர்வதேச சமூகம் இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கவேண்டும்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |