பொத்துவில் மண்ணை ஒற்றுமைப்படுத்தி மீண்டும் கெளரவப்படுத்திய முஸ்லிம் காங்கிரஸ்
கிழக்கு மண்ணில் உதயமாகி, இன்று தேசிய அரசியலில் வேரூன்றி நிற்கும் பேரியக்கமாகத் திகழ்கிறது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.
பல ஊர்களையும், பலரையும் நாடாளுமன்றம் வரையிலான கௌரவத்துக்குக் கொண்டுசெல்லும் பெரும் வாயிலாகவும் இக்கட்சி விளங்கியுள்ளது.
பொத்துவில் – முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாகச் சித்தரிக்கப்படும் இப்பிரதேசம், கட்சியின் வளர்ச்சிக்குப் பெரும் உறுதுணையாக இருந்துள்ளது.
பொத்துவில் சபை
1994ஆம் ஆண்டு, மர்ஹும் எம்.ஹெச்.எம்.அஷ்ரப் தலைமையிலான இக்கட்சி, உள்ளூராட்சி தேர்தலில் ஆறு சபைகளை வெல்லும் என்ற வாக்குறுதியுடன் போட்டியெடுத்தது.
இந்த சவாலை நிறைவேற்றத் தவறினால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவேன் என அஷ்ரப் அறிவித்திருந்தார்.
இறுதியில் நான்கு சபைகளையே வென்ற காரணத்தால், தனது சொந்த சவாலுக்கு நேர்மையுடன் பதவி விலகினார்.
அந்த நேரத்தில் கைப்பற்றப்படாத இரு சபைகளில் ஒன்று தான் பொத்துவில். ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட எஸ்.எஸ்.பி.அப்துல் மஜீத் பெற்ற பெரும் செல்வாக்கே இதற்கான காரணம்.
கட்சியின் எழுச்சி
இதைத் தொடர்ந்து, பொத்துவிலில் முஸ்லிம் காங்கிரசின் எழுச்சி அதிகரித்து, மக்கள் ஆதரவு தெளிவாகக் காணப்பட்டது.
இந்த ஆதரவை அஷ்ரப்பின் மறைவுக்குப் பின்னரும் கட்சி கவனித்தது.
2001ஆம் ஆண்டு, தேசியப்பட்டியலின் வாயிலாக பொத்துவில் மக்கள் சார்பாக எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எம்.பீ.அப்துல் அஸீஸை நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
2006, 2011 மற்றும் 2018 உள்ளூராட்சித் தேர்தல்களில் முஸ்லிம் காங்கிரஸ் பொத்துவில் பிரதேச சபையைக் கைப்பற்றி, அங்கு மாற்றமுடியாத ஆதிக்கம் செலுத்தியது.
தவிசாளராக எம்.எஸ்.எம்.மர்சூக் மற்றும் பின்னர் எம்.எஸ்.அப்துல் வாஸீ பொறுப்பேற்றனர்.
அதேவேளை, 2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸுக்கு சவாலாக அமைய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர் எஸ்.எம்.எம். முஷர்ரப் வெற்றி பெற்றார்.
ஆட்சியில் ஏற்பட்ட மாற்றம்
அதன் பின்னர், முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர் ஒருவர் கட்சி விட்டு அவருடன் இணைந்ததால், பொத்துவிலில் முஸ்லிம் காங்கிரசின் ஆட்சி இடைநிறுத்தம் கண்டது.
இந்த நிலைமையிலும், கட்சி தலைமைக் கட்டளை மீறாது, முன்னாள் எதிரிகள் உட்பட பலரை மீண்டும் இணைத்துக் கொண்டு, பொத்துவிலில் சமரசப் போக்கு வழியாக புதிய அதிகார அமைப்பை உருவாக்கியது.
அத்தோடு, முன்னாள் உறுப்பினர் முஷர்ரப்பை மீண்டும் கட்சியில் இணைத்ததுடன், எம்.எஸ்.அப்துல் வாஸீயை தேசியப்பட்டியல் வாயிலாக மீண்டும் நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் சென்றது.
மற்ற பல பிரதேசங்களிலும் தேசியப்பட்டியல் கோரிக்கைகள் இருந்தபோதிலும், பொத்துவில் மண்ணின் அரசியல் நிலையை நிலைப்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறு சீரான முடிவுகளை எடுக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் ஒரு பழைய உறவின் மதிப்பையும், பொத்துவில் மக்களின் மீது கட்சி மற்றும் தலைமை கொண்டிருக்கும் அக்கறையையும் வெளிப்படுத்துகின்றன.
இனியும் இந்த உறவை மதித்து, பொத்துவில் மக்கள் ஒற்றுமையோடு செயல்பட்டு, அரசியல் மற்றும் அபிவிருத்தியில் முன்நிலைய வகிப்பதுதான் எதிர்கால முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என அனைவரும் நம்புகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |