கந்தளாய் பாலத்தில் குடைசாய்ந்த டிப்பர்..பலத்த சேதத்துடன் மீட்பு!

Sri Lankan Peoples Eastern Province Accident
By Rakshana MA Jul 08, 2025 03:24 AM GMT
Rakshana MA

Rakshana MA

கந்தளாய் சூரியபுர பிரதேசத்தில் உள்ள சமகிபுர பகுதியில் நேற்று (07) மாலை, மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொறி ஒன்று பாலம் இடிந்து விழுந்ததால் குடைசாய்ந்தது.

இந்த விபத்தில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை எனினும் டிப்பர் லொறிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

வாகன இறக்குமதி குறித்து பொருளாதார நிபுணர் வெளியிட்ட முக்கிய தகவல்

வாகன இறக்குமதி குறித்து பொருளாதார நிபுணர் வெளியிட்ட முக்கிய தகவல்

பலத்த சேதத்துடன் மீட்கப்பட்ட டிப்பர்

இந்த டிப்பர் லொறி சூரியபுரயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும், நிறுவனத்திற்காக மணல் ஏற்றிச் சென்றுகொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நடந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய் பாலத்தில் குடைசாய்ந்த டிப்பர்..பலத்த சேதத்துடன் மீட்பு! | Dumper Truck Falls Through Bridge

வாய்க்காலைக் கடக்க முற்பட்டபோது, பழைய பாலம் எடையைத் தாங்க முடியாமல் இடிந்து விழுந்ததால் டிப்பர் லொறி நிலைதடுமாறி குடைசாய்ந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து சூரியபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

அரச சொகுசு வாகனங்களுக்கான ஏலம் அறிவிப்பு

அரச சொகுசு வாகனங்களுக்கான ஏலம் அறிவிப்பு

சோள இறக்குமதி குறித்து அராங்கத்தின் முக்கிய தீர்மானம்

சோள இறக்குமதி குறித்து அராங்கத்தின் முக்கிய தீர்மானம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW