வாகன இறக்குமதி குறித்து பொருளாதார நிபுணர் வெளியிட்ட முக்கிய தகவல்

Department of Motor Vehicles vehicle imports sri lanka Import
By Rakshana MA Jul 08, 2025 03:08 AM GMT
Rakshana MA

Rakshana MA

மோட்டார் வாகன இறக்குமதியை எளிதாக்குவதற்கு, நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பு, பயன்படுத்தப்படுவதில்லை என்று முன்னணி பொருளாதார நிபுணர் தனநாத் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

நாட்டுக்கு எந்தவொரு பொருட்களையும் இறக்குமதி செய்யும் போது, வெளிநாட்டு இருப்புக்கள் பயன்படுத்தப்படுவதில்லை, அதற்கு பதிலாக ஏற்றுமதிகள் மூலம் ஈட்டப்படும் பணமே பயன்படுத்தப்படுகின்றன என்று பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது மேலுள்ளவாறு குறிப்பிட்டுள்ளார்.  

புடின் பதவி விலக்கிய சிறிது நேரத்தில் சடலமாக மீட்கப்பட்ட அமைச்சர்

புடின் பதவி விலக்கிய சிறிது நேரத்தில் சடலமாக மீட்கப்பட்ட அமைச்சர்

வாகன இறக்குமதி 

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இருப்புகளைப் பயன்படுத்தி இறக்குமதிகள் செய்யப்பட்டால், இலங்கையின் இருப்பு அளவு ஒருபோதும் போதுமானதாக இருக்காது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

வாகன இறக்குமதி குறித்து பொருளாதார நிபுணர் வெளியிட்ட முக்கிய தகவல் | Sri Lanka Import Policy 2025

நாட்டின் இருப்புக்கள் சுமார் 6.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும், ஆனால் இலங்கை ஆண்டுதோறும் 20 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே, இறக்குமதிகளை இருப்புக்கள் மூலம் மேற்கொள்ள முடியாது என்று தனநாத் பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில் தேவைப்பட்டால், இருப்புக்கள் மூலம் இறக்குமதிகளை மேற்கொள்ளமுடியும் என்றும் பொருளாதார நிபுணர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.  

சோள இறக்குமதி குறித்து அராங்கத்தின் முக்கிய தீர்மானம்

சோள இறக்குமதி குறித்து அராங்கத்தின் முக்கிய தீர்மானம்

கவனயீர்ப்பு போராட்டத்தில் குதித்த வவுனியா - மினாநகர் மக்கள்

கவனயீர்ப்பு போராட்டத்தில் குதித்த வவுனியா - மினாநகர் மக்கள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW