அக்கரைப்பற்று மாநகர சபையால் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டம்
அம்பாறை - அக்கறைப்பற்று பிரதேசத்தில் நீண்ட காலமாக மிகவும் மோசமான நிலையில் காணப்பட்ட மைதானம் தற்போது துரிதமாக புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது என அக்கரைப்பற்று மாநகர சபை தெரிவித்துள்ளது.
இது அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் என்.எம்.நௌபீஸின் பணிப்புரைக்கு மற்றும் வழிகாட்டலுக்கு அமைய மாநகரசபை நிதியின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
துரிதமான புனரமைப்பு
இம்மைதானத்தின் சில பகுதிகளில் பெருமளவு குப்பைகள் கொட்டப்பட்டு வந்தமையினாலும், மைதானம் சீரின்மை காரணமாகவும் விளையாட்டு வீரர்களுக்கு பெரும் இடையூறாக அமைந்திருந்துள்ளது.
இந்த நிலையில், விளையாட்டுக் கழகங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்று மாநகரசபை இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்த கோரிக்கைக்கு அமைய, இங்குள்ள குப்பைகள் யாவும் துரிதமாக அகற்றப்பட்டுள்ளதுடன் மைதானத்தை செப்பனிட்டு, புனரமைக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக இந்த விளையாட்டு மைதானத்தை முழுமையாக அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |