கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகள்
கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் வருடாந்த அணிவகுப்பு மரியாதை மற்றும் வாகனங்களை பரிசோதனை செய்யும் நிகழ்வு இன்று (22) இடம்பெற்றுள்ளது.
கல்முனை உவெஸ்லி பாடசாலை மைதானத்தில், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்சீன் பக்கீர் தலைமையில் நடைபெற்றுள்ளது.
அணிவகுப்பு மரியாதை
இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஜி.டி.எஸ்.அமரசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்ச௧ர் இப்னு அசார் நெறிப்படுத்தலில் அணிவகுப்பில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார்.
அத்துடன், பொலிஸாரால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் சேவை பிரிவு நிலையங்கள், சுற்றுசூழல், பொலிஸ் உத்தியோகத்தர்களின் தங்குமிட அறைகள் என்பவற்றை பார்வையிட்டதுடன், பொலிஸார் பயன்படுத்தும் வாகனங்களையும் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார்.
மேலும், இந்நிகழ்வில் பொலிஸ் உப பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் என கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |











