வர்த்தகர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை
Sri Lanka Police
Sri Lankan Peoples
Crime
By Rakshana MA
நாட்டில் தற்போது அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த மற்றும் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் அதிகளவான வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 39 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுற்றிவளைப்பு நடவடிக்கை
இந்த நிலையில், நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் நேற்று முன்தினம் (22) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த சுற்றிவளைப்புகள் கேகாலை, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |