நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபட வேண்டும்: முனீர் முழப்பர்
நாட்டை கட்டியெழுப்ப இலங்கையர்களாக ஒன்றுபட வேண்டும் என தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் (Muneer Mulaffar) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (2) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் , எமது நாட்டின் நீண்டகால பிராத்தனையாக இருந்தது தேசிய ஐக்கியமாகும்.
இனவாதம்
கடந்த காலங்களில் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தவும் மதங்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்தவும் முயற்சித்து வந்ததை எமக்கு காணக்கூடியதாக இருந்தது.
சமூகவலைத்தளங்களை ஊடகங்களை அடக்க முற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இனவாதத்தை தோற்கடிக்க வேண்டும் என்றே ஜனாதிபதி எப்போதும் தெரிவித்து வருகிறார்.
மக்களை தூண்டி. மக்களை பிளவுபடுத்தும் விடயங்களை சுதந்திரமாக மேற்கொள்ள இடமளித்தால், அரசாங்கம் எதிர்பார்க்கும் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்த எமக்கு முடியுமா என்பது கேள்விக்குறியாகும் என்றும் முனீர் முழப்பர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |