இம்ரான் மஹ்ரூப் எம்.பிக்கு உயிர் அச்சுறுத்தல்

CID - Sri Lanka Police Trincomalee Sri Lanka Politician Imran Maharoof Eastern Province
By Rakshana MA Jul 09, 2025 10:26 AM GMT
Rakshana MA

Rakshana MA

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்பிற்கு சில முக்கியஸ்தர்களால் விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் மற்றும் சேறு பூசும் நடவடிக்கைகளுக்கு எதிராக அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டை அவர் நேற்றையதினம்(8) பதிவு செய்துள்ளார்.

அம்பாறையில் ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை தொடர்பில் எடுக்கப்படவுள்ள அதிரடி நடவடிக்கைகள்

அம்பாறையில் ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை தொடர்பில் எடுக்கப்படவுள்ள அதிரடி நடவடிக்கைகள்

உயிர் அச்சுறுத்தல் 

குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் தெரிவில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு வழங்காத காரணத்தால் குச்சவெளி மற்றும் புல்மோட்டை பிரதேச சில அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தனக்கு சமூக வலைத்தளம் ஊடாகவும் ஏனைய வழிகளிலும் உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இம்ரான் மஹ்ரூப் எம்.பிக்கு உயிர் அச்சுறுத்தல் | Mp Imran Files Threat Complaint

இதனையடுத்து, குறித்த நபர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தனது முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாகவும் அத்துடன் தனது சட்டதரணி ஊடாக அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளதாகவும் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.  

இஸ்ரேலிய கொடியை மிதிக்கும் காணொளியை பதிவேற்றிய மாவனெல்லை இளைஞர்!

இஸ்ரேலிய கொடியை மிதிக்கும் காணொளியை பதிவேற்றிய மாவனெல்லை இளைஞர்!

இயற்கையாக காடு போன்ற முடிவளர்ச்சி வேண்டுமா : சிறந்த ஒரே வழி

இயற்கையாக காடு போன்ற முடிவளர்ச்சி வேண்டுமா : சிறந்த ஒரே வழி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGallery