பூமியை விட்டு விலகும் நிலா: ஆய்வில் வெளியான தகவல்

Earth Day Climate Change Weather
By Laksi Aug 03, 2024 12:26 PM GMT
Laksi

Laksi

பூமியின் துணைக்கோளான நிலா பூமியை விட்டு மெதுவாக விலகி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வாளர் குழுவொன்று மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதன் காரணத்தால் பூமியிலும் பல வித மாற்றங்கள் நடக்கும் எனவும், பூமியிலிருந்து நிலா ஆண்டுக்கு சுமார் 3.8 செ.மீ. வீதம் விலகி செல்வதால் பூமியில் பகலின் நேரம் அதிகரிக்கும் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக் கட்சிக்கே வெற்றி: ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பகிரங்கம்

ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக் கட்சிக்கே வெற்றி: ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பகிரங்கம்

பில்லியன் ஆண்டுகளாக ஏற்படும் மாற்றம்

பூமியில் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் இருக்கும் நிலையில், நிலா விலகி செல்வதால் அது 25 மணி நேரமாக அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பூமியை விட்டு விலகும் நிலா: ஆய்வில் வெளியான தகவல் | Moon Leaving The Earth Time Change

எனினும் இந்த மாற்றம் சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு பிறகே மாறும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அத்தோடு,  கடந்த காலங்களிலும் பூமியின் ஒரு நாள் என்பது தொடர்ந்து நீட்டித்தே வந்துள்ளது.

கொழும்பில் தீவிரமாக ஆராயப்பட்ட ஆவணம்! மனோ கணேசன் வெளியிட்டுள்ள தகவல்

கொழும்பில் தீவிரமாக ஆராயப்பட்ட ஆவணம்! மனோ கணேசன் வெளியிட்டுள்ள தகவல்

நேர மாற்றம்

சுமார் 1.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் ஒரு நாள் என்பது வெறும் 18 மணி நேரமாக மட்டுமே இருந்துள்ளது. அது பல கோடி ஆண்டுகளுக்குப் பின்னரே இப்போது இருப்பது போல 24 மணி நேரமாக மாறி இருக்கிறது.

பூமியை விட்டு விலகும் நிலா: ஆய்வில் வெளியான தகவல் | Moon Leaving The Earth Time Change

பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான ஈர்ப்பு விசையே இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாகும். இந்த இரண்டிற்கும் இருக்கும் அலை சக்திகளில் ஏற்படும் மாற்றமே இதற்குக் காரணமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டில் இனப்பிரச்சினைக்கு தீர்வு : ரணில் தெரிவிப்பு

நாட்டில் இனப்பிரச்சினைக்கு தீர்வு : ரணில் தெரிவிப்பு

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW