அரசாங்கத்தின் எதிரியாக மாறியுள்ள குரங்குகள்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) தலைமையிலான அரசாங்கத்திற்கு சமீபகாலமாக நாட்டில் உள்ள குரங்குகள் பெரும் எதிரியாக மாறியுள்ளன.
நாட்டில் நேற்று (09) ஏற்பட்ட மின்வெட்டுக்கு காரணமாக, பாணந்துறை மின் இணைப்பு துணை மின்நிலையத்தில் குரங்கு ஒன்று குதித்தமை கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நேற்றைய தினம் ஏற்பட்ட மின்தடை சர்வதேச ரீதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
எதிரியான குரங்குகள்
மேலும், மக்கள் விடுதலை முன்னணியின் முக்கியஸ்தராக உள்ள கே.டி. லால்காந்த, பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் குரங்குகளை என்ன செய்யலாம் என அமெரிக்கத் தூதுவருடன் விவாதித்தாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், உலகின் பல்வேறு முக்கிய ஊடகங்களில் இலங்கையில் நேற்றைய தினம் ஏற்பட்ட மின்சாரத் தடை குறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளதுடன், குரங்கினால் இலங்கையில் ஏற்பட்ட மின்தடை என்ற பொருளில் பல்வேறு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதன்படி, நாடு முழுவதிலும் நேற்றைய தினம் ஏற்பட்ட மின்சாரத் தடைக்கு குரங்கு ஒன்று காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குரங்குகளை ஆண் வேறாகவும் பெண் வேறாகவும் பிரிப்பதற்கு திட்டமிடப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. இவற்றை வைத்துப் பார்க்கும் போது குரங்குகள் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்கு எதிரியாக மாறியுள்ளமை தெரியவருகின்றது.
அத்துடன், இவை தொடர்பில் ஏ.பி.பீ நியூஸ், டிம்சும்டெய்லி ஹொங்கொங், தி பிரசல்ஸ் டைம்ஸ், நியூஸ் 18, தி பெனிசுலா கட்டார், சீ.என்.பி.சீ, ஜீயோ இங்கிலிஷ், தி பிஸ்னஸ் ஸ்டார்டர்ட், வெக்கார்ட் நியூஸ்பேப்பர், பெஸ்ட்போஸ்ட், வியோன், தி ஸ்டெரிட் டைம்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் குரங்கினால் இலங்கை முழுவதிலும் மின்தடை என்ற அடிப்படையில் செய்தி தலைப்பிடப்பட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |