இலங்கையைப் பற்றிய எலோன் மஸ்க்கின் வெளியிட்ட தகவல்
உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க்(Elon Musk) இலங்கை தொடர்பில் தனது X கணக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, இலங்கையிலுள்ள பத்திரிகையாளர்களுக்கு செய்திகளை வெளியிடும் போது பாலின நடுநிலை சொற்களஞ்சியத்தை கற்பிப்பதற்கான ஒரு அபத்தமான திட்டத்திற்காக சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம், அமெரிக்க வரி செலுத்துவோரின் 7.9 மில்லியன் டொலர் பணத்தை செலவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச வளர்ச்சி
இது தொடர்பில் எலோன் மஸ்க் தனது பதிவில் தெரிவித்ததாவது,
சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனம் பல அபத்தமான திட்டங்களுக்கு பணத்தை செலவிட்டுள்ளது.
இந்த நிலையில், தேவையற்ற செலவுகள் அல்கொய்தா பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புடைய ஒரு பயங்கரவாதக் குழுவிற்கு உணவு வழங்க 10 மில்லியன் டொலர்களும், எகிப்தில் சுற்றுலாத் துறையை ஆதரிக்க 6 மில்லியன் டொலர்களும் செலவிட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இந்த வழியில் தேவையற்ற செலவுகள் செய்யப்பட்ட பல திட்டங்கள் உள்ளன. பல தசாப்தங்களாக, சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தின் செலவினங்களை யாரும் கண்காணிக்கவில்லை.
வரி செலுத்துவோரின் பணம்
அமெரிக்க வரி செலுத்துவோரின் பணத்தை வீணாக்க அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை உட்பட உலகளவில் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்ட அனைத்து ஒப்பந்த ஊழியர்களும் இன்றிரவு 11:59 மணி முதல் கட்டாய ஊதியத்துடன் கூடிய விடுப்பில் வைக்கப்பட வேண்டும்.
கட்டாய விடுப்பில் உள்ளவர்கள் 30 நாட்களுக்குள் அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகம் சமீபத்தில் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |