மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் அரச நியமனம் கோரி ஆர்ப்பாட்டம்
வேலையற்ற பட்டதாரிகள் அரச நியமனங்கள் கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை (07) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் அழைப்பினையடுத்து காந்திபூங்காவில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
மேலும், இதில் ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள், அரச நியமனத்தினை உறுதிப்படுத்து, காட்டாதே காட்டாதே பாரபட்சம் காட்டாதே, அழிக்காதே அழிக்காதே எங்களது கனவுகளை அழிக்காதே, வயது ஏறுது வாழ்க்கை போகுது வேலை வேண்டும் போன்ற பதாகைகள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கவனயீர்ப்பு போராட்டம்
அத்துடன், குறித்த மாவட்டத்தில் இது வரையில் 2000இற்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் உள்ள போதிலும் அவர்களுக்கான நியமனங்கள் குறித்து இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், பல்வேறு கனவுகளுடன் பல கஸ்டங்களுக்கு மத்தியில் பட்டங்களை முடித்துள்ள போதிலும், இதுவரையில் தமது வேலைவாய்ப்புகள் உறுதிப்படுத்தப்படவில்லை போன்ற பல்வேறு சுலோகங்கள் ஏந்தியவாறும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டதில் சுமார் ஒரு மணித்தியாலம் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து அங்கிருந்து பழைய கச்சேரியில் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து மகஜர் ஒன்றை கையளித்த பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து விலகி சென்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![Gallery](https://cdn.ibcstack.com/article/62c2fa05-0402-4bdd-8328-080206b9d382/25-67a5f3f29cce4.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/f3525764-864f-4347-89a8-60b76b755f14/25-67a5f3f349dab.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/6e3c0a4a-f15b-4fee-99c8-d14a8a534f81/25-67a5f3f3e6563.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/d01b1574-78c5-42a1-8cb7-1ed3568dae85/25-67a5f3f48c531.webp)