அதிகரித்துள்ள பச்சை மிளகாய் விலை!
இலங்கையில் மரக்கறிகளின் விலையில் ஏற்படும் விலை மாற்றங்களுக்கு அமைய தற்போது கறி மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலை கிலோ ரூபா 1,400 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தம்புள்ளை மற்றும் கெப்பட்டிபொல பொருளாதார மத்திய நிலையங்களில் நேற்று (06) பச்சை மிளகாயானது, ஒரு கிலோ ரூபா 1,000 ரூபா முதல் 1,100 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதிகரித்துள்ள பச்சை மிளகாய்
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கறி மிளகாய் விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததாலும், மழைக்காலத்துடன் பச்சை மிளகாய் விலையும் அதிகரித்துள்ளது.
எனினும், பொருளாதார மத்திய நிலையங்களுக்கு குறைந்த அளவே மிளகாய் விநியோகிக்கப்படுவதால் விலையேற்றம் அதிகரித்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கறி மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் தவிர ஏனைய காய்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளன. சமீபத்தில், கரட் கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை குறைக்கப்பட்டதுடன், தற்போது கரட்டின் மொத்த விலை கிலோ ரூ.400 ஆக உயர்ந்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கும் என பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |