கந்தளாயில் குரங்குகளின் தொல்லை! பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கந்தளாயில் குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விவசாயிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக வாழை, தென்னை மா, பலா போன்ற பழங்கள் மற்றும் காய்கறிகளை குரங்குகள் அழித்து விடுவதால், விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரங்குகளின் தொல்லை
கந்தளாய் பேராறு, பேராற்று வெளி, அனைக்கட், மதுரசா நகர், ரஜ எல, வான் எல மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்தவகையில் விவசாயிகள் தங்கள் பயிர்களை இழந்து பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.
குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை சேதப்படுத்துவதும், மனிதர்களை தாக்குவதும் தொடர்கிறது.
இதனால் பொதுமக்கள் தங்களது வாழ்க்கையை இழந்து தவிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
வனத்துறை அதிகாரிகள், குரங்குகளை பிடித்து வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



