கிழக்கு அபிவிருத்திக்காக இந்தியாவிடமிருந்து 2,371 மில்லியன் ரூபா நிதி

Government Of Sri Lanka Government Of India India Education
By Rakshana MA Dec 24, 2024 09:55 AM GMT
Rakshana MA

Rakshana MA

சமூக-பொருளாதார மேம்பாடு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம், இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2,371.83 மில்லியன் இலங்கை ரூபா நிதியுதவியின் கீழ் கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியான அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வெள்ள நிலைமையினால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நிதியுதவி

வெள்ள நிலைமையினால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நிதியுதவி

33 திட்டங்கள்

இதன்படி, கல்வி, சுகாதாரம், விவசாயம், மீன்பிடி, சுற்றுலா மற்றும் சமூக வலுவூட்டலுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் தொடர்பான 33 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டன.

கிழக்கு அபிவிருத்திக்காக இந்தியாவிடமிருந்து 2,371 மில்லியன் ரூபா நிதி | Million Rupees From India For Eastern Development

இதன்படி, இரு தரப்புக்கும் இடையில் உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு நிதி, கொள்வனவு மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்

ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்

சேதமடைந்த வீதிகளை புனரமைப்பு செய்யும் பணிகளை விரைவுபடுத்துங்கள் - ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

சேதமடைந்த வீதிகளை புனரமைப்பு செய்யும் பணிகளை விரைவுபடுத்துங்கள் - ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW