வெள்ள நிலைமையினால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நிதியுதவி
வெள்ள நிலைமையினால் சேதமடைந்த 6 பயிர்களுக்கு ஹெக்டேயருக்கு 100,000 ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பில், இன்று (24) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) இதனை கூறியுள்ளார்.
நீர்ப்பாசன அமைச்சர்
மேலும், பயிர்களில் நெல், சோளம், உருளைக்கிழங்கு, மிளகாய், வெங்காயம் மற்றும் சோயாபீன்ஸ் ஆகியவை அடங்கும் என நலிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 02 ஆம் திகதி வரையில் கடந்த மோசமான காலநிலையினால் ஏற்பட்ட பயிர் சேதங்கள் தொடர்பில் விவசாய, காணி, கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |