50வருட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி : சிரியாவை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்!

United Human Rights United Nations Syria World
By Rakshana MA Dec 08, 2024 12:01 PM GMT
Rakshana MA

Rakshana MA

புதிய இணைப்பு

சிரியாவில் (Syria) ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் (Bashar al-Assad) 53 ஆண்டுகளுக்கும் மேலான ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதுடன் 14 ஆண்டுகளுக்குப் பிறகு, சிரியர்கள் ஒரு அரசாங்கத்திற்கு எதிராக அமைதியான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மத்திய கிழக்கு நாடான சிரியாவில் 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் உள்நாட்டு போர் வெடித்தது.

சிரியா ஜனாதிபதி பஷார் அல் அசாத் ஆட்சியை எதிர்த்து யாத் தஹ்ரி அல் ஹாம் என்ற கிளர்ச்சி அமைப்பினர் கடந்த வாரம் முதல் இராணுவத்துடன் மீண்டும் ஆயுதமேந்த தொடங்கினர்.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்

அரச கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் 

அசாத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர சூளுரைத்த கிளர்ச்சியாளர்கள் இன்று காலை, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் இற்குள் நுழைந்ததை பகிரங்கமாக அறிவித்தனர்.  

இதைத் தொடர்ந்து அரச கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் முழுவதும் கிளர்ச்சியாளர்கள் குழுவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

50வருட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி : சிரியாவை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்! | Middle East War Update

இதன் மூலம் அசாத் குடும்பத்தின் 53 ஆண்டுகால ஆட்சி சிரியாவில் முடிவுக்கு வந்தது.

கிளர்ச்சியாளர்கள் குழு டமாஸ்கஸை நுழைந்ததை அடுத்து பஷார் அல் அசாத் நாட்டை விட்டு விமானத்தில் தப்பியோடி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆரம்பிக்கப்படவுள்ள சுற்றிவளைப்புக்கள் : நாடளாவிய ரீதியில் களமிறங்கும் அதிகாரிகள்!

ஆரம்பிக்கப்படவுள்ள சுற்றிவளைப்புக்கள் : நாடளாவிய ரீதியில் களமிறங்கும் அதிகாரிகள்!

முதலாம் இணைப்பு

சிரியாவின் (Syria) தலைநகர் டமாஸ்கசை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால், நகரை சுற்றிலும் குவிக்கப்பட்டிருந்த அரசாங்கத்தின் படை வீரர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிறையிலிருந்து கைதிகள் விடுவிப்பு

இந்நிலையில், கிளர்ச்சியாளர்கள் தலைநகரை கைப்பற்றியதால் சிரியா ஜனாதிபதி பஷார் அல்-அசாத் ( Bashar al-Assad ) டமாஸ்கசை விட்டு வெளியேறியுள்ளார்.

50வருட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி : சிரியாவை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்! | Middle East War Update

இதனைத்தொடர்ந்து தலைநகர் டமாஸ்கஸ் எல்லைப் பகுதியில் பஷார் அல்-அசாத்தின் தந்தையின் சிலையை கிளர்ச்சியாளர்கள் உடைத்துள்ளதோடு, டமாஸ்கசில் முக்கிய சிறையிலிருந்து கைதிகளை கிளர்ச்சியாளர்கள் விடுவித்துள்ளனர்.

இது தொடர்பாக கிளர்ச்சியாளர்கள் அமைப்பின் மூத்த தளபதி ஹசன் அப்துல் கானி தனது ரெலிகிராம் பதிவில், "டமாஸ்கஸ் நகரத்தை பஷார் அல்-அசாத்திடமிருந்து விடுவித்ததாக நாங்கள் அறிவிக்கிறோம்.

ஜனாதிபதி தப்பிச் சென்ற விமானம் மாயம்

உலகம் முழுவதும் இடம்பெயர்ந்த மக்களே, சுதந்திர சிரியா உங்களுக்காக காத்திருக்கிறது" என்று தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது.

50வருட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி : சிரியாவை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்! | Middle East War Update

இந்நிலையில் சிரியா நாட்டில் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் தப்பிச் சென்ற விமானம் மாயமாகி உள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள், பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் சிரியா செல்வது என்பது ஏற்று கொள்ள முடியாதது என கூறி வரும் நிலையில் இந்த பதற்ற நிலை உருவாகி உள்ளது.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பில் அநுரவின் திட்டம் சாத்தியமாகலாம்..!

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பில் அநுரவின் திட்டம் சாத்தியமாகலாம்..!

இரண்டாம் இணைப்பு

சிரியாவில் உள்ள அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய நிலையில், தலைநகர் டமாஸ்கஸ் நோக்கி முன்னேறி சிரியாவை கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தற்போது சிரியா நாட்டில் ஜனாதிபதி பஷார் அல் -ஆசாத் தலைமையிலான அரசு தலைமையில் காணப்படுகின்றது.

 அந்நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகின்றது.

இன்றைய வானிலை மாற்றம்

இன்றைய வானிலை மாற்றம்

ஐ. நாவின் அறிக்கை

மேற்படி உள்நாட்டுப் போரில் 3 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என ஐ.நா.அமைப்பு தெரிவித்துள்ளதுடன் இந்த எண்ணிக்கையை விட 2 மடங்கு அதிகம் (6 லட்சம்) என சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவிக்கின்றது.

50வருட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி : சிரியாவை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்! | Middle East War Update

சில ஆண்டுகளாக பெரிய அளவில் வன்முறை எதுவும் ஏற்படாத நிலையில், கடந்த வாரம் மீண்டும் கிளர்ச்சி வெடித்தது. ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபட்டனர்.

இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில் இந்த கிளர்ச்சி வெடித்துள்ளது.

சிரியாவுக்கான அல்-கொய்தா கிளை அமைப்புடன் தொடர்பிலுள்ள ஹயத் தஹ்ரீர் அல்-ஷாம் அமைப்பின் தலைவர் அபு முகமது கூறுகையில், ஜனாதிபதி பஷார் அல்-ஆசாத்தின் ஆட்சிக்கு முடிவு ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களுடைய இலக்கு என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு - கிழக்கு பொலிஸ் அதிகாரிகளுக்கான இடமாற்றம்

வடக்கு - கிழக்கு பொலிஸ் அதிகாரிகளுக்கான இடமாற்றம்

ஆட்சி முடிவுக்கான போர்..

முன்னதாக சிரியாவில் உள்ள அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். இந்த சூழலில், சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் நோக்கி கிளர்ச்சியாளர்கள் முன்னேறி ஆட்சியை பிடித்துள்ளனர்.

50வருட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி : சிரியாவை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்! | Middle East War Update

இந்நகரை சுற்றிலும் குவிக்கப்பட்ட வீரர்களை அரசு வாபஸ் பெற்றுள்ளது என தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. அரச படைகள் முற்றாக சரணடைந்து விட்டன.

டமாஸ்கஸின் மோவாதமியா அல்-ஷாம் மற்றும் தரயா உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளில் இருந்தும், மிஜ்ஜே இராணுவ விமான நிலையத்தில் இருந்தும் கூட அரசு படைகள் வாபஸ் பெறப்பட்டு விட்டன என கூறப்படுகிறது.

கிண்ணியாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட குடும்ப தலைவர்

கிண்ணியாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட குடும்ப தலைவர்

உணவின் தரம் தொடர்பில் வெளியான தகவல்கள்

உணவின் தரம் தொடர்பில் வெளியான தகவல்கள்

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW