மருதமுனை தேர்தல் குழுவுடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விசேட சந்திப்பு

SJB Srilanka Muslim Congress Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 30, 2024 08:53 AM GMT
Laksi

Laksi

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தேர்தல் செயற்பாடுகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்த மருதமுனை தேர்தல் குழுவுடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விசேட சந்திப்பை நடாத்தியுள்ளது.

இந்த நிகழ்வானது மருதமுனை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு செயலாளர் அபுல் ஆசிரியர் தலைமையில் நேற்று (29) நடைபெற்றுள்ளது.

இதன்போது, கட்சியின் உச்ச பீடத்தின் தீர்மானத்திற்கமைவாக ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச வெற்றிக்காக கடின உழைப்புடன் செயற்பட்ட தேர்தல் குழுவுக்கும், மருதமுனை பிரதேசத்தில் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்த மக்களுக்கும் கட்சியின் தலைவர் சார்பிலும், கட்சி சார்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

தீர்மானத்தை இடைநிறுத்தியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு

தீர்மானத்தை இடைநிறுத்தியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு

கட்சி செயற்பாடு

அத்தோடு, எதிர்காலத்தில் பல சவால்களை எதிர்கொள்வதற்கான திராணியை வளர்த்துக்கொள்வதுடன் எமது கட்சி செயற்பாடுகளில் புதிய இளைய தலைமுறையினருக்கு முன்னுரிமை வழங்கி கட்சி செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டி உள்ளது என்றும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மருதமுனை தேர்தல் குழுவுடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விசேட சந்திப்பு | Meeting With Slmc Maruthamuna Election Committee

குறித்த நிகழ்வில்,  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரிஸ், பிரதி தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை, கட்சியின் உச்ச பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட செயற்குழுவின் செயலாளருமான ஏ.சி.சமால்தீன், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.எஸ். உமர் அலி, எம்.எம். முஸ்தபா, எம்.எஸ்.எம். நவாஸ், மருதமுனை மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

வரலாற்றுச் சாதனை படைத்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவர்கள்

வரலாற்றுச் சாதனை படைத்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவர்கள்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு வழங்கல் தொடர்பில் நாமல் கூறியுள்ள விடயம்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு வழங்கல் தொடர்பில் நாமல் கூறியுள்ள விடயம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery