தீர்மானத்தை இடைநிறுத்தியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு

Election Commission of Sri Lanka Election
By Mayuri Sep 30, 2024 06:45 AM GMT

பெரும்போகத்தின் போது, விவசாயிகளுக்கு 25,000 ரூபாய் கொடுப்பனவும், மீனவர்களுக்கு எரிபொருள் மானியமும் வழங்குவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எடுத்த தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது.

பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான மானியத்தை வழங்க தீர்மானித்ததன் மூலம் ஏனைய வேட்பாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொள்கை தீர்மானம்

தேர்தல்கள் ஆணைக்குழு நேற்றுமுன்தினம் கூடியபோது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தீர்மானத்தை இடைநிறுத்தியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு | Election Commission Special Notice

இதன்படி, பொதுத் தேர்தலின் பின்னர் குறித்த கொள்கைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW