வேலையற்ற பட்டதாரிகளுக்கும் தேசிய மக்கள் சக்தியினருக்கும் இடையில் கலந்துரையாடல்

Trincomalee Eastern Province General Election 2024
By Laksi Oct 12, 2024 01:15 PM GMT
Laksi

Laksi

வேலையற்ற பட்டதாரிகளுக்கும், தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் சப்றானுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது மூதூர் கலாசார மண்டபத்தில் இன்று (12) காலை நடைபெற்றுள்ளது.

இதன் போது, உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் எம்.சப்றான், தேசிய மக்கள் சக்திக்கு நாம் ஏன் வாக்களிக்க வேண்டுமென வருகை தந்த பட்டதாரிகளுக்கு தெளிவுபடுத்தினார்.

கிழக்கு ஆளுநரை சந்தித்து கலந்துரையாடிய இந்திய பிரதி உயர்ஸ்தானிகர்

கிழக்கு ஆளுநரை சந்தித்து கலந்துரையாடிய இந்திய பிரதி உயர்ஸ்தானிகர்

வேலைவாய்ப்பு

அத்தோடு, தேசிய மக்கள் சக்தி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 113 ஆசனங்களை பெறும்.பெற்றதன் பின்னர் வேலையற்ற பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புக்குள் முறைப்படி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ,எமது பயணத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட முன்வருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலையற்ற பட்டதாரிகளுக்கும் தேசிய மக்கள் சக்தியினருக்கும் இடையில் கலந்துரையாடல் | Meet With Unemployed Graduates And Npp In Trinco

இந்த சந்திப்பில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர்,தோப்பூர்,வெருகல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும், தேசிய மக்கள் சக்தியின் மூதூர்,தோப்பூர் பகுதிகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் இதன்போது பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தல் செலவு அறிக்கை சமர்ப்பிப்பிற்கான கால அவகாசம் தொடர்பில் வெளியான தகவல்

ஜனாதிபதித் தேர்தல் செலவு அறிக்கை சமர்ப்பிப்பிற்கான கால அவகாசம் தொடர்பில் வெளியான தகவல்

சடுதியாக அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

சடுதியாக அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW