நாட்டில் மருந்து தட்டுப்பாட்டிற்கு தீர்வு: நலிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டு

Sri Lanka Government Of Sri Lanka Medicines Nalinda Jayatissa
By Laksi Dec 11, 2024 06:40 AM GMT
Laksi

Laksi

நாட்டில் எதிர்காலத்தில் மருந்து தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனத்திற்கும் உள்நாட்டு வர்த்தகர்களுக்கும் இடையில் முன்பதிவுகளை வழங்குவதில் குறைபாடுகள் காணப்பட்டதாகவும், அவை தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

புத்தக வெளியீட்டிற்கான வற் வரியை விரைவில் நீக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

புத்தக வெளியீட்டிற்கான வற் வரியை விரைவில் நீக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

மருந்து உற்பத்தி

அவர் மேலும் தெரிவிக்கையில் ,ஏறக்குறைய 50 பில்லியன் ரூபா பெறுமதியான விலைமனு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு கிட்டத்தட்ட 350 வகையான மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான அனுமதி கிடைத்துள்ளது.

நாட்டில் மருந்து தட்டுப்பாட்டிற்கு தீர்வு: நலிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டு | Measures To Prevent Medicine Shortages Nalinda

உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு குறைந்தது 3 மாதங்களுக்கு முன்னதாக மருந்து உற்பத்திக்கான முன்பதிவுகளை வழங்க வேண்டும்.

தற்போது அதற்கேற்ப உள்நாட்டு உற்பத்தியாளர்கள் உற்பத்தியை ஆரம்பித்துள்ளனர் என்று நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

காரைதீவில் பால்நிலை சார் வன்முறைக்கு எதிரான செயலணிக் கூட்டம்

காரைதீவில் பால்நிலை சார் வன்முறைக்கு எதிரான செயலணிக் கூட்டம்

கிழக்கு ஆளுநருக்கும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதிய பிரதிநிதிக்கும் இடையில் சந்திப்பு

கிழக்கு ஆளுநருக்கும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதிய பிரதிநிதிக்கும் இடையில் சந்திப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW