கிழக்கு ஆளுநருக்கும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதிய பிரதிநிதிக்கும் இடையில் சந்திப்பு

Trincomalee Sri Lanka Eastern Province Maldives
By Laksi Dec 11, 2024 03:35 AM GMT
Laksi

Laksi

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர (Jayantha Lal Ratnasekera) மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்துக்கான (UNFPA) பிரதிநிதி குன்லே அதெனிக்கும் (Kunle Adeniyi) இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது நேற்று (10) திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடலின் போது, கிழக்கு மாகாணத்தில் உள்ள சமூகங்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முன்முயற்சிகளுக்கு ஆதரவளிக்க பல்வேறு பங்குதாரர்களுடன் UNFPA இன் தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக அதெனி உறுதியளித்தார்.

வடக்கு மாகாணத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வடக்கு மாகாணத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பல்கலாச்சாரத் தன்மை

பெண்கள் மற்றும் சிறுமிகளின் ஆரோக்கியம், பாலின சமத்துவம் மற்றும் காலநிலை மீள்தன்மை போன்ற முக்கிய துறைகளில் கவனம் செலுத்துவதை அவர் முன்னிலைப்படுத்தியதோடு, இந்த முயற்சிகளில் ஆளுநரின் தொடர்ச்சியான ஆதரவினை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு ஆளுநருக்கும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதிய பிரதிநிதிக்கும் இடையில் சந்திப்பு | Eastern Governor Meet For Unfpa Kunle Adeniyi

இதற்குப் பதிலளித்த ஆளுநர், கிழக்கு மாகாணத்தின் பல்கலாச்சாரத் தன்மையை அங்கீகரித்து, அதன் பன்முகத்தன்மையை பலமாகப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மூதூரில் காட்டு யானைகள் அட்டகாசம்: மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

மூதூரில் காட்டு யானைகள் அட்டகாசம்: மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

குடும்ப வன்முறைகள்

மேலும், மாகாணத்தில் சமூக மற்றும் இன நல்லிணக்கத்தையும், பாலின சமத்துவத்தையும் மேம்படுத்துவதே தனது முதன்மையான கவனம் என்று அவர் கூறிய ஆளுநர், குடும்ப வன்முறைகள் அதிகமாக இருப்பதையும் சுட்டிக்காட்டி, பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

கிழக்கு ஆளுநருக்கும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதிய பிரதிநிதிக்கும் இடையில் சந்திப்பு | Eastern Governor Meet For Unfpa Kunle Adeniyi

அதெனி, ஆளுநரை சந்தித்தமையையிட்டு, நன்றி தெரிவித்ததோடு, ஆளுநரின் பதவிக்காலத்திற்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

ஆளுநரின் தலைமையில் கிழக்கு மாகாணம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடையும் என்றும் அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW