புத்தக வெளியீட்டிற்கான வற் வரியை விரைவில் நீக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

Sri Lanka Sri Lankan Peoples Value Added Tax​ (VAT)
By Laksi Dec 11, 2024 05:56 AM GMT
Laksi

Laksi

புத்தக வெளியீட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத வற் வரியை விரைவில் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் தினேஷ் குலதுங்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான யோசனையை அடுத்த வரவு செலவுத் திட்டத்திற்கு பரிந்துரைப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் மீண்டும் மின்தடை ஏற்படும் அபாயம்: வெளியான எச்சரிக்கை

நாட்டில் மீண்டும் மின்தடை ஏற்படும் அபாயம்: வெளியான எச்சரிக்கை

வற் வரி

அவர் மேலும் தெரிவிக்கையில், “புதிய அரசாங்கம் வந்து ஒரு சில வாரங்களே ஆகியுள்ளன, இந்த நேரத்தில் நாங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்கப் போவதில்லை.

புத்தக வெளியீட்டிற்கான வற் வரியை விரைவில் நீக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை | Tax For Book Publication Government Action

மிகத் தெளிவாக கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு வந்த ஜனாதிபதி, அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் இது பற்றிப் பேசுவோம் என்றார். அடுத்த பட்ஜெட்டுக்கு நேரம் இருக்கிறது.

எனவே நாமும் முன்கூட்டியே சொல்கிறோம். 60 மில்லியனுக்கும் அதிகமான ஆண்டு வருவாய் உள்ளவர்கள் வற் வரியை செலுத்த வேண்டும்.அதற்குத் தகுதியானவர்கள் அவர்களே.

காரைதீவில் பால்நிலை சார் வன்முறைக்கு எதிரான செயலணிக் கூட்டம்

காரைதீவில் பால்நிலை சார் வன்முறைக்கு எதிரான செயலணிக் கூட்டம்

புத்தக வெளியீடு 

புத்தக வெளியீடு மற்றும் அச்சுத் துறையில் இப்படிப்பட்டவர்கள் குறைவு. அவர்கள் உரிமை கோர முடியாது. எங்களால் க்ளைம் செய்ய முடியாவிட்டாலும், அனைத்தும் செலுத்தப்பட்டு விட்டது. " என்றார்.

புத்தக வெளியீட்டிற்கான வற் வரியை விரைவில் நீக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை | Tax For Book Publication Government Action

மேலும் ,வற் வரி அதிகரிப்பால் புத்தகங்களின் விற்பனை 30 வீதத்தால் குறைந்துள்ளதாக தினேஷ் குலதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

திருகோணமலை மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம்

திருகோணமலை மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW