கல்முனை பகுதிகளில் உள்ள உணவகங்களின் சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை

Sri Lanka Eastern Province Kalmunai
By Laksi Mar 06, 2025 06:35 AM GMT
Laksi

Laksi

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள வியாபார நிலையங்கள், உணவகங்களின் சுகாதாரத்தினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும், கல்முனை மாநகர சபை ஆணையாளருக்குமிடையிலான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்றுள்ளது.

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்

கலந்துரையாடல்

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கல்முனை வடக்கு, கல்முனை தெற்கு, சாய்ந்தமருது ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள வியாபார நிலையங்கள் மற்றும் உணவகங்களை பதிவு செய்கின்ற போது சுகாதார ரீதியாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கிய விடயங்கள், முறையான திண்மக் கழிவகற்றல் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

கல்முனை பகுதிகளில் உள்ள உணவகங்களின் சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை | Measures To Improve Restaurants In Kalmunai

இந்த கலந்துரையாடலின் போது பிராந்திய சுற்றுச்சூழல், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி ஏ.எஸ்.எம்.பௌசாத், கல்முனை வடக்கு, கல்முனை தெற்கு, சாய்ந்தமருது ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகளான  என்.ரமேஷ், சரப்டீன், என்.மதன், பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லபீர், உணவு மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராஜா உள்ளிட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நிந்தவூரில் கைவிடப்பட்ட வைத்தியசாலை மற்றும் மைதானம் தொடர்பில் வெளியான தகவல்

நிந்தவூரில் கைவிடப்பட்ட வைத்தியசாலை மற்றும் மைதானம் தொடர்பில் வெளியான தகவல்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
Gallery