நிந்தவூரில் கைவிடப்பட்ட வைத்தியசாலை மற்றும் மைதானம் தொடர்பில் வெளியான தகவல்
Sri Lankan Peoples
Hospitals in Sri Lanka
Eastern Province
Nintavur
By Rakshana MA
கடந்த ஆட்சியில் நிர்மாணிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிந்தவூர் வைத்தியசாலை மற்றும் கல்முனை சந்தாண்கேணி மைதானத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா இன்று(05) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இதன்படி, கடந்த அரசாங்கத்தினால் நிந்தவூரில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் மற்றும் மகப்பேறு வைத்தியசாலைக்குரிய கட்டிடம், கல்முனை பகுதியில் உள்ள சந்தாண்கேணி மைதானம் உள்ளிட்ட பகுதிகள் தற்போது கைவிடப்பட்ட நிலையில் புதர்மண்டிக்கிடப்பது தெரியவந்துள்ளது.
களவிஜயம்
குறித்த களவிஜயத்தில் நிந்தவூர் பிரதேச பிரதான செயற்பாட்டாளர் எம்.எல்.சம்சுன் அலி உள்ளிட்ட பொறுப்பான அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |











