முன்னாள் எம்.பி மாவை வைத்தியசாலையில் அனுமதி
                                    
                    Jaffna
                
                                                
                    Paataali Makkal Katchi
                
                                                
                    Mavai Senathirajah
                
                                                
                    Sri Lanka Politician
                
                                                
                    Hospitals in Sri Lanka
                
                        
        
            
                
                By Rakshana MA
            
            
                
                
            
        
    இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா யாழ். போதனா வைத்தியசாலையில் அவசரமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவசர சிகிச்சை யாழ். போதனா வைத்தியசாலைக்கு இன்று காலை கொண்டு செல்லப்பட்ட மாவை சேனாதிராஜாவிற்கு தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையில் மாவை
வீட்டில் தவறி விழுந்த நிலையில் தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக தற்போது அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW | 
 
                 
                 
                                             
     
     
     
     
     
     
     
     
     
     
     
    