தொழுநோய் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறையில் மருந்து வழங்கும் செயற்றிட்டம்!
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் இறுதி ஞாயிற்றுக் கிழமைகளில் அனுஷ்டிக்கப்படும் தொழுநோய் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் ஏற்பாட்டில் விசேட விழிப்புணர்வு நிகழ்வும், தோல் நோயாளர்களுக்கு மருந்து வழங்கும் செயற்றிட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வானது, வளத்தாப்பிட்டி க்ரேஸ் பாலர் பாடசாலை கட்டிடத்தில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி எம்.எம். நௌசாதின் தலைமையில் நடைபெற்றது.
அதிக தொழுநோயாளர்கள்
இந்த நிலையில், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கல்முனை பிராந்தியத்தில் அதிக தொழுநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.
மேலும், இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவிக்கையில்,
மாத்திரைகள் உட்கொள்ளும் பட்சத்தில் ஒரு வருடத்தினுள் தொழுநோயை முற்றாக குணமாக்கி விடலாம் என சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இந்த நிகழ்வில் கல்முனை பிராந்திய தொற்று நோய் தடுப்பு வைத்திய அதிகாரி எம்.ஏ.சி.எம். பஸால், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை தோல் நோய் பிரிவு வைத்தியர் உனைசியா ஆகியோருடன் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர்கள், பொது சுகாதார மாதுக்கள் என பலரும் கலந்து கொண்டு பிரதேச மக்களுக்கு சேவை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |