பணயக் கைதிகளுக்கு பரிசுப்பொருட்கள்! குழம்பியுள்ள இஸ்ரேல்
ஹமாஸால் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட நான்கு பெண் இஸ்ரேல் இராணுவத்தினரை கடந்த சனிக்கிழமை(25) ஹமாஸ் விடுவித்தது.
அப்பொழுது அவர்களிடம் ஹமாஸ் சில பரிசுப் பொருட்களையும் சான்றிதல்களையும் வழங்கியுள்ளது.
ஹமாஸின் நோக்கம்
இதில் ஹமாஸின் நோக்கம் தெளிவாக இல்லாவிட்டாலும், ஒரு வகையான குறியீட்டுச் செய்தியை காட்டுவதாக சர்வதேச பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹமாஸால் கொடுக்கப்பட்டுள்ள பரிசுப் பொருட்களுக்கு உள்ளே பாலஸ்தீன கொடி அடங்கிய கீ செயின் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன், இது சுதந்திர பாலஸ்தீன போராட்டத்தை ஹமாஸ் வலுவாக இருப்பதை உலக அரசியல் நோக்கர்களுக்கு காட்டுவதற்காக வழங்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
மேலும் இஸ்ரேல் பாலஸ்தீன மோதலில் இஸ்ரேலுக்கு எதிராக தாங்கள் வலுவாக இருப்பதை உலகிற்கு பறைசாற்றும் விதமாக இது பார்க்கப்படுகின்றது.
ஹமாஸின் இந்த செய்தி இஸ்ரேலிய இராணுவத்திற்கு குழப்பத்தையும் அமைதியின்மையையும் வழங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |