மட்டக்களப்பில் உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது
Batticaloa
Eastern Province
Crime
By Laksi
மட்டக்களப்பு (Batticaloa)- வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்நாட்டு தயாரிப்பான துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வாகரை அம்மந்தன்வெளி பகுதியிலிருந்து இந்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இதன்போது, உள்நாட்டு தயாரிப்பான இந்த துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டில் 26 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவரை வாகரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |