கிண்ணியா பிரதேச விவசாயிகளுக்கு அரசாங்கத்தின் இலவச உர விநியோகம்

Trincomalee Government Of Sri Lanka Eastern Province
By Laksi Dec 18, 2024 10:52 AM GMT
Laksi

Laksi

புதிய அரசாங்கத்தால் விவசாயிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்ட, இலவச உர விநியோகம் இன்று (18) கிண்ணியா விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப கட்டமாக, கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, மஜித் நகர் கிராம சேவகர் பிரிவில், குரங்குபாஞ்சான், வெள்ளம்குளம் மற்றும் தீனேரி ஆகி விவசாய சம்மேளன பிரிவு விவசாயிகளுக்கு MOP பசளை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கு அனுமதி: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

வாகன இறக்குமதிக்கு அனுமதி: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

உர விநியோகம்

பெரும்போக விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 10 கிலோ கிராம் வீதமும், சிறு போக விவசாயிகளுக்கு 12 கிலோ கிராம் வீதமும் வழங்கி வைக்கப்பட்டது என கிண்ணியா கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். கே. அஜித்கான் தெரிவித்துள்ளார்.

கிண்ணியா பிரதேச விவசாயிகளுக்கு அரசாங்கத்தின் இலவச உர விநியோகம் | Free Fertilizer Distribution By Farmers Kinniya

கிண்ணியா கமநல சேவை பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 15 விவசாய சம்மேளன பிரிவுகள் இருப்பதாகவும், அனைத்து பிரிவு விவசாயிகளுக்கும் கட்டம் கட்டமாக இலவச MOP உரம் வழங்கி வைக்கப்படும் எனவும் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் மேலும் தெரிவித்துள்ளார்.

2028இல் எமது அரசாங்கமே ஆட்சி அமைக்கும்: ஜனாதிபதி அறிவிப்பு

2028இல் எமது அரசாங்கமே ஆட்சி அமைக்கும்: ஜனாதிபதி அறிவிப்பு

கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்த வலயக்கல்வி பணிப்பாளர்கள்

கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்த வலயக்கல்வி பணிப்பாளர்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW