நாடாளுமன்றத்தில் கல்வித் தகைமைகளை சமர்ப்பித்த சஜித்
தனது சகல கல்வித் தகைமைகளையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) இன்று (18) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனை சமர்ப்பித்துள்ளார்.
முன்பள்ளிக் கல்வியை புனித பிரிட்ஜெட்ஸ் கொன்வன்ட்டிலும், தரம் 1 முதல் தரம் 5 வரையான கல்வியை புனித தோமஸ் ஆரம்பப் பாடசாலையிலும் கற்றதாக சஜித் குறிப்பிட்டுள்ளார்.
கல்வித் தகைமை
அத்தோடு, புனித தோமஸ் ஆரம்பப் பாடசாலையிலும், தரம் 6 முதல் தரம் 9 வரை ரோயல் கல்லூரியிலும் கற்றதாக தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையில் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவில்லை என்றும் இங்கிலாந்தில் உள்ள மில்ஹில் கல்லூரியில் கல்வி கற்றதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.
அந்த வகையில், 1983-1984 ஆண்டு காலப் பகுதியில் இங்கிலாந்தில் பொது நிலை தேர்வில் கலந்து கொண்டு 2 ஏ சித்தியும், 2 பி சித்தியும் மற்றும்3 சி சித்தியும் பெற்று தேர்ச்சி பெற்றதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |