மட்டக்களப்பில் பாம்பு தீண்டி நபர் ஒருவர் உயிரிழப்பு

Sri Lanka Police Batticaloa Eastern Province
By Rakshana MA Jul 02, 2025 04:35 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திருநீற்றுக்கேணி கிராமத்தில் பாம்பு தீண்டி இரண்டு பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள குளக்கட்டு வழியாக இன்று (01.07.2025) மாலை நடந்து வந்து கொண்டிருந்த போது, பாம்பு தீண்டியதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த திருநீற்றுக்கேணியிலள்ள குறித்த நீண்ட காலமாக பாம்புகள் இருப்பதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

நுளம்பு கட்டுப்பாட்டு தேசிய வாரம் இரண்டாம் நாளின் ஆய்வுகள்..!

நுளம்பு கட்டுப்பாட்டு தேசிய வாரம் இரண்டாம் நாளின் ஆய்வுகள்..!

பாம்பு தீண்டல்

அதேநேரம், முதலைகளின் தொல்லைகளும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யோகராசா தில்லைவாசகம் என்னும் இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான 38 வயது நபரே இவ்வாறு பலியானதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் பாம்பு தீண்டி நபர் ஒருவர் உயிரிழப்பு | Man Dies From Snakebite In Batticaloa

உயிரிழந்தவரின் சடலம் ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   

முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு குறித்து வெளியான அறிவிப்பு

முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு குறித்து வெளியான அறிவிப்பு

மரண ஓலத்துக்கு பின் காசாவில் ஒலித்த கூச்சல்

மரண ஓலத்துக்கு பின் காசாவில் ஒலித்த கூச்சல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery