நுளம்பு கட்டுப்பாட்டு தேசிய வாரம் இரண்டாம் நாளின் ஆய்வுகள்..!

Sri Lanka Ministry of Health Sri Lanka Government Of Sri Lanka
By Rakshana MA Jul 02, 2025 03:43 AM GMT
Rakshana MA

Rakshana MA

2025 ஜூன் 30ஆம் திகதியன்று ஆரம்பித்த நுளம்பு கட்டுப்பாட்டு தேசிய வாரத்தின் கீழ் நடத்தப்பட்ட சிறப்பு ஆய்வின் கீழ், ஒரு பகுதியாக ஜூலை 1ஆம் திகதியன்று, மொத்தம் 22,294 வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்களைக் கொண்ட 4,965 வளாகங்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், 657 இடங்களில் நுளம்புகள் வாழும் இடங்களாக கண்டறியப்பட்டதாகவும், சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் ஊடகப் பேச்சாளர், சமூக மருத்துவ நிபுணர் பிரசஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்த வளாகங்களில் 553 இடங்களில் சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இஸ்ரேல் - காசா இடையே போர்நிறுத்தம்.. ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

இஸ்ரேல் - காசா இடையே போர்நிறுத்தம்.. ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

நுளம்பு கட்டுப்பாடு 

இதனடிப்படையில், இதுவரை 153 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட சமரவீர, நேற்று முன்தினமும் நேற்றும் மொத்தம் 48,354 வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், மொத்தம் 10,591 இடங்கள் நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

நுளம்பு கட்டுப்பாட்டு தேசிய வாரம் இரண்டாம் நாளின் ஆய்வுகள்..! | Dengue Breeding Sites Found In Srilanka

கூடுதலாக, செயலில் உள்ள நுளம்புகளை கொண்ட 1,611 வளாகங்கள் கண்டறியப்பட்டதாகவும், இதனடிப்படையில், 1,193 சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு 256 சட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   

நுளம்புக்கட்டுப்பாட்டு தேசிய வாரம் 2025 ஜூன் 30 அன்று ஆரம்பித்து ஜூலை 05 வரை முடிவடையவுள்ளது.

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட வானிலை அறிவித்தல்

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட வானிலை அறிவித்தல்

சஜித் அநுரவோடு பேசி ஒப்பந்தம் செய்திருந்தால் பல சபைகளை கைப்பற்றியிருக்கலாம்..!

சஜித் அநுரவோடு பேசி ஒப்பந்தம் செய்திருந்தால் பல சபைகளை கைப்பற்றியிருக்கலாம்..!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW