காதலிக்கு காணொளி அழைப்பை ஏற்படுத்திவிட்டு உயிரிழந்த இளைஞர்

Sri Lanka Police Batticaloa Sri Lanka
By Shalini Balachandran Jul 25, 2024 02:51 PM GMT

மட்டக்களப்பில் (Batticaloa)  காதலியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று (24) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், வாழைச்சேனை காவல் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞனே இவ்வாறு உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சிறுவர்களிடையே அதிகரிக்கும் நோய்த்தாக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் சிறுவர்களிடையே அதிகரிக்கும் நோய்த்தாக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொழும்பு புறக்கோட்டை

இந்த இளைஞர் கொழும்பு (Colombo) புறக்கோட்டை பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் வேலை செய்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலிக்கு காணொளி அழைப்பை ஏற்படுத்திவிட்டு உயிரிழந்த இளைஞர் | Man Commit Suicide Due Conflict With Girlfriend

உயிரிழந்த இளைஞர் காதலிக்கு காணொளி அழைப்பை எடுத்து தொடர்பு கொண்ட நிலையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினரின்  ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மேலும், மரணமடைந்த இளைஞனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை புறக்கோட்டை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிலிப்பைன்சில் கன மழையில் சிக்கி பலர் பலி

பிலிப்பைன்சில் கன மழையில் சிக்கி பலர் பலி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW