நீடித்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க காரைதீவில் முக்கிய கலந்துரையாடல்
மாளிகைக்காடு பிரதேச மக்களின் நீடித்த பிரச்சினைகள் தொடர்பாக, காரைதீவு பிரதேச சபை தவிசாளருடன் அதிகாரப்பூர்வமாக ஒரு முக்கிய சந்திப்பு முன்னெடுக்கப்பட்டது.
குறித்த சந்திப்பானது இன்று (10) காரைதீவு பிரதேச சபை அலுவலகத்தில் நடைபெற்றது.
மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் செயலாளர் நெறிப்படுத்தலில், பள்ளிவாசல் தலைவர் ஏ.பௌசர் தலைமையில் நம்பிக்கையாளர்கள் குழுவினர், பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் பாஸ்கரனை சந்தித்தனர்.
மக்கள் பிரச்சனை
இந்த சந்திப்பில், மாளிகைக்காடு மையவாடியின் புனரமைப்பு மின்விளக்கு பொருத்தல் மற்றும் பழுது பாரத்தல் திண்மக் கழிவு முகாமைத்துவம் சமூக நல்லிணக்கம் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.
மேலும், காரைதீவு பிரதேச சபை எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் மேலதிகமாக ஆராயப்பட்டது.
மேலும் இந்த சந்திப்பில், உப தவிசாளர் எம்.எச்.எம்.இஸ்மாயில், மாளிகைக்காடு பள்ளிவாசலின் உதவித் தலைவர் ஏ.எம்.ஜாஹீர், பிரதேச சபை உறுப்பினர் எம்.என்.எம்.ரணீஸ், ஆலோசகர் எம்.ஐ.இஸ்திகார் பொருளாளர் எம்.எப்.எம்.றிபாஸ், முன்னாள் உப தலைவர் யூ.எல்.செய்னுலாப்தீன் மற்றும் பல நம்பிக்கையாளர்கள் கலந்து கொண்டு, முக்கியமான கருத்துக்களை முன்வைத்தனர்.
அதேவேளை, மக்கள் நலத்திற்கான ஒத்துழைப்பு தொடர்பான இந்த சந்திப்பு, எதிர்காலத்தில் செயல்முறை முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




