வர்த்தக வரி குறித்து அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் இலங்கை அரசாங்கம்..!

Sri Lanka United States of America Income Tax Department
By Rakshana MA Jul 10, 2025 09:21 AM GMT
Rakshana MA

Rakshana MA

30% வர்த்தக வரி குறித்து அமெரிக்காவுடன் இலங்கை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.

ஓகஸ்ட் முதலாம் திகதி இறுதி வரை மேலும் கலந்துரையாடல்கள் நடைபெறும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

திருகோணமலை சமூக சேவைகள் திணைக்கள முன்னேற்ற மீளாய்வு

திருகோணமலை சமூக சேவைகள் திணைக்கள முன்னேற்ற மீளாய்வு

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட வரி 

இலங்கை அரசாங்கம் பல்வேறு தரப்பினருடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் காரணமாக அமெரிக்கா விதித்த 44% வரியை 30% ஆகக் குறைப்பது சாத்தியமானதாகவும் ஹர்ஷன சூரியப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார்.

வர்த்தக வரி குறித்து அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் இலங்கை அரசாங்கம்..! | Us Sri Lanka Trade Tariff Talks

இந்த நிலையில், இலங்கை ஏற்றுமதிகளின் மீது ஓகஸ்ட் முதலாம் முதல் 30% இறக்குமதி வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை அமெரிக்க மீது விதித்துள்ள வர்த்தகத் தடைகளை நீக்குமாயின், அமெரிக்கா விதித்துள்ள வரிகளை மீளாய்வு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

செம்மணியில் கொடூரமாக புதைக்கப்பட்ட மக்கள்! அரசு நீதியாக செயற்படவில்லை

செம்மணியில் கொடூரமாக புதைக்கப்பட்ட மக்கள்! அரசு நீதியாக செயற்படவில்லை

நாட்டிற்குள் சட்டவிரோத அழகுசாதன பொருட்கள் இறக்குமதி: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

நாட்டிற்குள் சட்டவிரோத அழகுசாதன பொருட்கள் இறக்குமதி: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW