இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் கிண்ணியாவுக்கு விஜயம்
இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் எச்.ஈ பத்லி ஹிஷாம் ஆதம் (HE Badli Hisham Adam) திருகோணமலை (Trincomalee)-கிண்ணியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.
குறித்த விஜயத்தினை அவர் இன்று (9) மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, கிண்ணியா அல் மினா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டுள்ளார்.
உபகரணங்கள் வழங்கும் வைபவம்
அத்தோடு, ஸ்ரீலங்கா முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் அனுசரணையுடன் வழங்கப்பட்ட, அவசர தேவையுள்ள 122 மாணவர்களுக்கு இந்த உபகரணத் தொகுதியை வழங்கி வைத்தார்.
பாடசாலையின் அதிபர் எம்.வை ஹதியத்துள்ளா தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் ஸ்தாபகரும் தலைவருமான T.L.M. நௌஸாத், பணிப்பாளர் A.C. பைஸர்கான், தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் நவாஸ் பாறூக் மற்றும் கிண்ணியா வலயக்கல்விப் பணிப்பாளர் முனவ்வரா நளீம் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |