வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கி வைப்பு
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வேலைத் திட்டம் மட்டக்களப்பில் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த பிரம்படித்தீவு குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கு நிகழ்வு பிரம்படித்தீவு பொதுக் கட்டடத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நிதி உதவிகள்
இதன்படி, பிரம்படித்தீவு பகுதிகளில் பாதிக்கப்பட்ட 146 குடும்பங்களுக்கும், சாராவெளி பகுதிகளில் பாதிக்கப்பட்ட 13 குடும்பங்களுக்கும் என மொத்தமாக 159 குடும்பங்களுக்கு சுவிஸ்லாந்தில் வசிக்கும் இலங்கையரால் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேச மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாடசாலையில் இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |