கட்டட நிர்மாணிப்பின் போது தவறி விழுந்த நபர் மரணம் : சாய்ந்தமருது பொலிஸ்

Batticaloa Sri Lanka Eastern Province Accident
By Rakshana MA Dec 09, 2024 08:41 AM GMT
Rakshana MA

Rakshana MA

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  கடை ஒன்றின் கட்டுமான வேலையில் ஈடுபட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், மரணமடைந்த இளம் குடும்பஸ்தரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

50வருட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி : சிரியாவை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்!

50வருட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி : சிரியாவை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்!

விசாரணை

சாய்ந்தமருது பிரதான வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கடை தொகுதியில் ஏற்பட்ட அனர்த்தம் ஒன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்ததுடன் மற்றுமொருவர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் மீட்கப்பட்ட நபர் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தீவிர சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை நீதிமன்ற பதில் நீதவான் அப்துல் ரசீட் முஹம்மது கலீல் சடலத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளார்.

அதன் பின்னர் நீதவானின் கட்டளையின் பிரகாரம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு உடற்கூற்று பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டு சட்ட வைத்திய அதிகாரியின் மரண விசாரணை நடவடிக்கையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பாவங்களை மொத்தமாக விட ஆசையா...?

பாவங்களை மொத்தமாக விட ஆசையா...?

மரணத்திற்கான காரணம்

குறித்த மரணம் மூச்சு திணரல் காரணமாக ஏற்பட்டதா? அல்லது வேறு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதா என்பதை கண்டறிய கொழும்பில் உள்ள பகுப்பாய்வு திணைக்களத்திற்கு சடலத்தின் சில பகுதிகள் சான்றிற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 12 நாள் ஆண் குழந்தை ஒன்றின் தந்தையான சாய்ந்தமருதுவை சேர்ந்த 29 வயதுடைய அப்துல் மஜீட் மஹ்தி அஹாஸ் அஹமட் என்பவரே புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மலசலகூட குழியில் தவறி விழுந்து ஸ்தலத்தில் மரணமடைந்துள்ளார். 

கட்டட நிர்மாணிப்பின் போது தவறி விழுந்த நபர் மரணம் : சாய்ந்தமருது பொலிஸ் | Sainthamaruthu Man Sudden Dead Incident

அத்துடன் மரணமடைந்த இளம் குடும்பஸ்தரை காப்பாற்றுவதற்காக உடனடியாக செயற்பட்ட மாவடிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 42 வயதான இஸ்மாயில் றிபான் என்பவர் காயமடைந்து அபாயக் குரல் எழுப்பிய நிலையில் அங்கு வந்தவர்களினால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த கடை கட்டுமான வேலை தளத்தில் மூவர் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சாய்ந்தமருது பொலிஸாரின் புலன் விசாரணை முன்னெடுக்கப்படுவதுடன் அம்பாறையில் இருந்து வரவழைக்கப்பட்ட பொலிஸ் தடயவியல் (SOCO) பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனமையும் குறிப்பிடத்தக்கது.

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை என்பது இலகுவாக தீர்க்கப்பட வேண்டியது : அதாஉல்லா

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை என்பது இலகுவாக தீர்க்கப்பட வேண்டியது : அதாஉல்லா

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery