வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலங்களை நேரில் சென்று பார்வையிட்ட தாஹிர் எம்.பி
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வேளாண்மை செய்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இதன்போது, வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளான வயல் நிலங்கள், வடிச்சல் வாய்க்கால் மற்றும் சிதைவுகளுக்குள்ளான வீதிகள் போன்றவற்றினை பார்வையிட்டுள்ளார்.
செப்பனிடல் பணி..
இங்கு கருத்து தெரிவித்த அவர்,
அம்பாறை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் பாரிய வெள்ள நிலைமை உருவாகியது.
இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், வட்டை விதானைமார் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட கருத்துகளுக்கு அமைய சிதைவுக்குள்ளாகிவரும் வீதிகளினை செப்பனிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதனையடுத்து உரிய அதிகாரிகளிடம் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு விவசாயிகளின் பிரச்சினைக்கு துரித தீர்வை பெற்றுக் கொடுக்குமாறும் வேண்டிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |