மட்டக்களப்பு பாடசாலை மட்ட அபாய குறைப்பு தொடர்பான பயிற்சிப் பட்டறை
மட்டக்களப்பில் பாடசாலை மட்ட அபாய குறைப்பு தொடர்பான பயிற்சிப் பட்டறை ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 7 மற்றும் 8 ஆகிய இரு தினங்களாக இந்த பயிற்சிப் பட்டறை மட்டக்களப்பு - கல்லடியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் 31 பாடசாலைகளில் இருந்து 35 ஆசிரியர்கள் பங்கேற்றிருந்தனர்.
எதிர்கால நோக்கம்
பயிற்சிப் பட்டறையில் கலந்துரையாடப்பட்ட சமகால மற்றும் பயனுள்ள விடயங்கள் மாணவர்களை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கடந்த வெள்ள அனர்த்தத்தின் போது அவசர கால உதவித்திட்டத்தின் கீழ் கிரான் மற்றும் மண்முனை (மேற்கு - வடக்கு ) சுகாதார சேவைத்திணைக்களங்கள் ஊடாக படுக்கை விரிப்பு ,பாய், சிறுவருக்கான தேவையான பொருட்கள் போன்ற அவசர உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |