மூதூர் விவசாயிகளால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
வெள்ள அனர்த்தத்தினால் தமது வேளாண்மைச் செய்கை அழிவடைந்துள்ளதாகவும் அரசாங்கம் தமக்கும் நஷ்டஈடு வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தி மூதூர் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது இன்று (9) மூதூர் -பச்சநூர் சந்தியில் இடம்பெற்றுள்ளது.
இந்த போராட்டத்தினை மூதூர் கமநல சேவைப் பிரிவிலுள்ள விவசாய சம்மேளனங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
நஷ்டஈடு
அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மூதூர் கமநல சேவை பிரிவில், சுமார் 2000க்கும் மேற்பட்ட ஏக்கர் வேளாண்மைச் செய்கை அழிவடைந்து பாதிக்கப்பட்டுள்ளது.
மூதூர் கங்குவேலி திருக்கரைசை விவசாய சம்மேளனப் பிரிவில் யாருடைய அனுமதியுமின்றி புதிய வாய்க்கால் தோண்டப்பட்டமையால் கங்குவேலி குளத்திலிருந்தும், மேட்டுநில பரப்பிலிருந்தும் மேலதிக நீர் தமது வேளாண்மை நிலங்களுக்குள் வந்தமையால் சுமார் 2000 ஏக்கர் வேளாண்மை அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட தமக்கு நஷ்டஈடு வழங்க வேண்டுமெனவும், அனுமதியின்றி வெட்டப்பட்ட வாய்க்காலை மூட வேண்டுமெனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |