மதுபான விற்பனை தொடர்பில் கலால் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 19, 2024 05:08 AM GMT
Laksi

Laksi

இலங்கை முழுவதிலும் உள்ள உயர்தர நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் வில்லாக்களில் வசிக்கும் சுற்றுலாப் பயணிகள் தவிர, தேர்தல் வார இறுதியில் மதுபானங்களை விற்பனை செய்வது கலால் திணைக்களத் தவிசாளரின் உத்தரவின் பேரில் தடை செய்யப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை கலால் திணைக்களம் நேற்றையதினம் (18) மீண்டும் வெளியிட்டுள்ளது.

அதன் படி, ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் செப்டெம்பர் 21 ஆம் திகதி சனி மற்றும் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட அறிக்கைகள்!

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட அறிக்கைகள்!

பொதுமக்கள் முறைப்பாடுகள் 

இருப்பினும், மூன்று நட்சத்திர வகுப்பு வரம்பிற்கு அப்பால் உள்ள சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் வில்லாக்கள் மேற்கண்ட உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்தில் தங்களுடைய விருந்தினர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு சேவை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

மதுபான விற்பனை தொடர்பில் கலால் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு | Liquor Shop Closing Dates In Sri Lanka

இதேவேளை, கலால் திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1913, கலால் கட்டளைச் சட்டத்தை மீறும் சந்தர்ப்பங்கள் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடுகள் மற்றும் தகவல்களுக்காக 24 மணிநேரமும் திறந்திருக்கும் என கலால் திணைக்களத்தின் பேச்சாளர் சன்ன வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கோர விபத்து : இருவர் உயிரிழப்பு!

வவுனியாவில் கோர விபத்து : இருவர் உயிரிழப்பு!

நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப ரணிலுக்கு சந்தர்ப்பம் வழங்குவோம்

நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப ரணிலுக்கு சந்தர்ப்பம் வழங்குவோம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW