இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களின் நிலை! வெளியான அறிக்கை
இலங்கையிலுள்ள 3.5 மில்லியன் இளம் தலைமுறையினரில் 29 சதவீதமான பாடசாலை மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த விடயம் இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விடயம் 2024ஆம் ஆண்டு உலகளாவிய பாடசாலைகளை அடிப்படையாக கொண்ட மாணவர் சுகாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆய்வு
கடந்த வருடம் 40 அரச பாடசாலைகளில் தரம் 08 முதல் 12 வரையிலான 3,843 மாணவர்களை இணைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
அத்தோடு இந்த சுகாதார ஆய்வறிக்கையானது, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக பிரதியமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தலைமையில் சர்வதேச பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய 71 வீதமானோர் பாடசாலைக்கு செல்வதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 29.3 வீதமானோர் அதிக எண்ணெய் கலந்த உணவை பெற்றுக் கொள்வதுடன் 40.9 வீத மாணவர்கள் நாளாந்தம் அதிக சீனி கலந்த உணவுகளை உட்கொள்வதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |