பெருந்தோட்ட மக்களுக்கான நிரந்தர காணி உறுதி பத்திரம்

Sri Lanka Upcountry People Ranil Wickremesinghe Sri Lanka
By Shalini Balachandran Aug 02, 2024 06:22 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

பெருந்தோட்ட மக்களின் உண்மையான சமூகமயமாக்கலுக்கு அவர்கள் அனைவருக்கும் நிரந்தர காணி உறுதி பத்திரங்களை வழங்குவதாகவும் மற்றும் வசிப்பிட உரிமையை இனி சலுகைப் பத்திரத்தில் மட்டுப்படுத்தாமல் இது சம்பந்தமான ஜனாதிபதியின் வேலைத்திட்டம் தொடர்கிறது எனவும் பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை கேகாலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, சுமார் 200 வருட கால வரலாற்றைக் கொண்ட பெருந்தோட்ட மக்களே தமக்காக உரிமை இல்லாத காணிகளினால் அதிகம் பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரணிலுக்கு ஆதரவு வழங்குவது குறித்து மகிந்த வெளியிட்ட புதிய அறிவிப்பு

ரணிலுக்கு ஆதரவு வழங்குவது குறித்து மகிந்த வெளியிட்ட புதிய அறிவிப்பு

காணி ஒதுக்கீடு

இந்தநிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்தின் பிரகாரம் பெருந்தோட்ட மக்களுக்காக புதிய கிராமங்களை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்ட மக்களுக்கான நிரந்தர காணி உறுதி பத்திரம் | Land For Upcountry People

மேலும், தோட்டக் கம்பனிகள் அதற்கான காணிகளை ஒதுக்கீடு செய்து அரச தலையீட்டில் வீடுகள் நிர்மாணிக்கப்படுமெனவும், சகல வசதிகளுடனும் கிராமங்கள் நிர்மாணிக்கப்படுமெனவும் மற்றும் தோட்ட மக்களை உண்மையாகவே சமூகமயப்படுத்துவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகுமெனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்மாயில் ஹனியா படுகொலை மனித உரிமை மீறலாகும்: ரிஷாட் பதியுதீன் கண்டனம்

இஸ்மாயில் ஹனியா படுகொலை மனித உரிமை மீறலாகும்: ரிஷாட் பதியுதீன் கண்டனம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW