இஸ்மாயில் ஹனியா படுகொலை மனித உரிமை மீறலாகும்: ரிஷாட் பதியுதீன் கண்டனம்

Israel Iran Israel-Hamas War
By Laksi Aug 01, 2024 01:47 PM GMT
Laksi

Laksi

தமது மண்ணுக்கான உரிமை மீட்பு போராட்டத்தில் நிலைத்து நின்ற ஹமாஸ் அரசியல் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியா படுகொலை சம்பவமானது மிலேச்சனத்தின் வெறியர்களின் முகங்களை காட்டுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ஆக்கிரமிப்பினை மட்டும் கொண்டு ஹமாஸ் மக்களையும், சிறுவர்களையும், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியோர்கள் என பாராது கொடூரமான முறையில் கொன்றொழிக்கும் இஸ்ரேலின் இந்த செயலை நான் பிரதிநிதித்துவம் செய்யும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸானது வண்மையாக கண்டிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கோழைத்தனமான தாக்குதல்களினால் ஒரு போதும் பாலஸ்தீனத்தின் விடுதலை பாதையினை முடக்க முடியாது எனவும் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் செயலாளர்கள் கைது!

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் செயலாளர்கள் கைது!

ஹனியா கொலை 

இது தொடர்பில் தனது அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், இலங்கை-பலஸ்தீன உறவு என்பது பல ஆண்டுகள் நெருக்கமானது, இந்த உறவானது எம்மில் இருந்து பிரிக்க முடியாததொன்று என்பதால் தான் நாம் இழப்புக்களின் வேதனையை உணர்கின்றோம்.

இஸ்மாயில் ஹனியா படுகொலை மனித உரிமை மீறலாகும்: ரிஷாட் பதியுதீன் கண்டனம் | Hamas Leader Killed Rishad Bathiudeen Condemned

பாலஸ்தீனத்தின் போராட்டம் என்பது உலகலாவிய வல்லரசுகள் கூட நியாயம் கண்டுள்ள நிலையில் இஸ்ரேல் தொடர்ந்து கட்டுக்கடங்காது காட்டுமிராண்டித்தனமாக மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் அந்த மக்களை மேலும் பல இழப்புக்களுக்குள் தள்ளிவருகின்றது.

அப்பட்டமான மனித உரிமை மீறல்களாக இந்த படுகொலை காணப்படுவதாகவும், எல்லை மீறும் இஸ்ரேலின் இந்தமோசமான மனித படுகொலையினை நிறுத்த உலக நாடுகள் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

 இஸ்ரேலின் இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் அமைப்பின் தலைவர் மர்ஹூம் இஸ்மாயில் ஹனியாவின் மறைவுக்கு எமது கட்சி ஆழ்ந்த கவலையினை வெளிப்படுத்துகின்றது.அதே போல் சஹீதுடைய அந்தஸ்தினை எல்லாம் வல்ல அல்லாஹூத்தாஆலா அவருக்கு வழங்க பிரார்த்தனை செய்கின்றேன். என தெரிவித்துள்ளார்.

புதிய பிரதி பொலிஸ் மா அதிபராக லலித் பத்திநாயக்க நியமனம்

புதிய பிரதி பொலிஸ் மா அதிபராக லலித் பத்திநாயக்க நியமனம்

ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியா கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்

ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியா கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW